இந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன் 2 என்னவாகும்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன் 2 தான் தன்னுடை கடைசி படம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன் 2 என்னவாகும்?
கமல்ஹாசன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன் 2 தான் தன்னுடை கடைசி படம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்த்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 

அரசியல் வேலைகளுக்கு இடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கான மேக்கப் டெஸ்ட் மேற்கொண்டதாகவும், அப்போது நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் மிரட்டலாக போஸ் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இம்மாதம் இரண்டாவது வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 

இது தவிர தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கும் வேலையையும் தொடங்க இருப்பதாக ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவெண்டி 20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக கேரளா சென்றுள்ள கமல், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர், '2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். இந்தியன் 2 படம் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இந்தப் படத்திற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டேன். கேரள மற்றும் ஒடிசா முதல்வர்களைச் சந்தித்தேன். அவர்களின் திட்டங்களை தமிழகத்திலும் பிரதிபலிப்பேன்' எனப் பேசியதாகத் தெரிகிறது. 

கமலின் இந்த அறிவிப்பால் தேவர் மகன் இரண்டாம் பாகம் என்னவாகும் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.