இனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால் யோசிக்கலாம்: யாஷிகா

புதிய படங்களில் இனி ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் நடிகை யாஷிகா ஆனந்த்.

இனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால் யோசிக்கலாம்: யாஷிகா
யாஷிகா ஆனந்த்

புதிய படங்களில் இனி ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளாராம் நடிகை யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தன் மீதான ஆபாசப்பட நாயகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு, பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார் யாஷிகா. அந்த நிகழ்ச்சியில் மஹத்துடன் காதல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியபோதும், யாஷிகா மீது மக்களின் பார்வை மாறியது. 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மஹத்துடன் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். அப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 


அதில் கலந்து கொண்ட யாஷிகா, பிக் பாஸ் அனுபவங்கள், புதிய பட வாய்ப்புகள் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

"பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளது. மக்களுடன் எளிதாக தொடர்ப்பு கொள்ளக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. என்னுடைய இமேஜை மாற்றியுள்ளது. நல்ல படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. 

மஹத்தும் நானும் சேர்ந்து நடிப்பது அவரது காதலி பிராச்சிக்கு நன்றாக தெரியும். அவர் இதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். வேலை என்று வரும் போது இதெல்லாம் சகஜம். நிறைய கிசுகிசுக்கள் வரும் தான். ஆனால் அது என்னுடைய வளர்ச்சிக்கு உதவும் என்றே நினைக்கிறேன். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் கூட நிறைய ஜோக்ஸ் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். படப்பிடிப்பில் சொல்லும் ஜோக்குகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். 

உங்களுக்காக ஒரு ஜோக் சொல்கிறேன். என்னுடைய மொபைல் போன் கையில் இருந்து தவறிவிட்டது. ஆனால் கீழே விழவில்லை.... ஏன் தெரியுமா... (சிறிது இடைவெளிக்கு பிறகு சிரித்துக்கொண்டே தொடர்கிறார்) ஏன்னா அது பிளைட் மோடில் இருந்ததால் பறந்து போய்டிச்சு. (இந்த மொக்க ஜோக்கை கேட்டு நாமும் சிரித்தோம்) 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு சின்ன ரோல்களிலும், ஐட்டம் சாங்குகளிலும் நடித்தேன். ஆனால் இப்போது ஹீரோயினாக உயர்ந்திருக்கிறேன். இதனால் இனி ஐட்டம் சாங்குகளில் நடிக்க மாட்டேன். அதேவேளையில் படத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் கிளாமராக நடிக்கவும் தயங்க மாட்டேன். முன்னணி சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறேன்", இவ்வாறு அவர் கூறினார்.