உறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்!

உறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்!
முருகதாஸ்

முருகதாஸ் சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார், அதை அவரே டுவிட்டரில் சொன்னார்.

தற்போது அதைப்போலவே ஒரு பேட்டியில் அனிருத் பேட்டயை தொடர்ந்து மீண்டும் ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன் என அவரே கூறியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாரயணனை தொடர்ந்து அனிருத்தும் ரஜினியுடன் இரண்டாவது முறை கைக்கோர்த்துள்ளார்.