எதிர்பாராத நேரத்தில் வெளியான விஸ்வாசம் அப்டேட் – ரசிகர்கள் கொண்டாட்டம்.!

எதிர்பாராத நேரத்தில் விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

எதிர்பாராத நேரத்தில் வெளியான விஸ்வாசம் அப்டேட் – ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஸ்வாசம்

எதிர்பாராத நேரத்தில் விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மேலும் இப்படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ஒரு இடத்தில் கூட கத்தரி போடவில்லை என டி.இம்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.