எவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்

தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

எவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: நடிகை அனுஷ்கா எரிச்சல்
அனுஷ்கா சர்மா

தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கணவர் விராட் கோஹ்லியும் அவரவர் கெரியரில் பிசியாக உள்ளனர். இந்நிலையில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இது குறித்து அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார். கர்ப்பம் பற்றி அனுஷ்கா கூறியிருப்பதாவது, 

நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நான் கர்ப்பமாகும் முன்பே என்னை தாயாக்கிப் பேசுபவர்களை பார்த்தால் வியப்பாக உள்ளது. 

மக்கள் வதந்திகளை பரப்பத் தான் செய்வார்கள். கர்ப்பத்தை எல்லாம் எப்படி மறைக்க முடியும். திருமணத்தை மறைக்கலாம், கர்ப்பத்தை மறைக்க முடியுமா?. இது போன்ற வதந்திகளை எல்லாம் நான் கண்டுகொள்வது இல்லை. இதெல்லாம் எங்கிருந்து கிளம்புகிறது என்று தெரியவில்லை. நான் ரொம்ப பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.