'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்!

தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் தற்போதைக்கு உள்ள இளம் வில்லி நடிகை வரலட்சுமி சரத்குமார் தான்.

'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்!
வரலட்சுமி சரத்குமார்

தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் தற்போதைக்கு உள்ள இளம் வில்லி நடிகை வரலட்சுமி சரத்குமார் தான்.

வில்லத்தனம் செய்வதில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் பிரபாஸ் பற்றி பேசியுள்ளார்.

யாரை பார்த்து ஐ லவ் யூ சொல்ல விரும்புகிறீர்கள் என்று பேட்டி ஒன்றில் வரலட்சுமி சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சட்டென்று பிரபாஸ் என்று கூறி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார். 

பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் செய்து வைக்க அவர் வீட்டில் தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் வரலட்சுமி இப்படி கூறியுள்ளார். இதற்கு பிரபாஸ் என்ன சொல்லப் போகிறாரோ? 

தற்போது உள்ள பெண்கள் நாளைக்கு புதன்கிழமை என்பது போன்று இந்த ஐ லவ் யூவை சொல்கிறார்கள். அதனால் வரலட்சுமி அந்த ஐ லவ் யூவை சீரியஸாக இல்லாமல் நட்புடன் சொல்ல விரும்பியிருக்கலாம். 

அதே பேட்டியில் விஷாலுக்கு நீங்கள் தோழியா, வில்லியா என்று கேட்டதற்கு இரண்டுமே இல்லை என்றார் வரலட்சுமி. வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்பட்டது. அதை இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.