ஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்!
தேவி

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க தற்போது அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரே ஜோடி நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.