ஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை!

பட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.

ஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை!
ஸ்ருதி மராதே

பட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.

மராத்தி பட உலகில் பிரபலமானவர் ஸ்ருதி மராதே. அவர் இந்திர விழா, நான் அவனில்லை 2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் பட வாய்ப்புக்காக படுக்கை அழைத்ததாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 

நான் 16 வயதில் இருந்து இந்த சினிமா துறையில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்னால் கொண்டாடப்படுவதும், பின்னால் கேவலப்படுத்தப்படுவதுமாக உள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே சொகுசாக வாழ்கிறார்கள் எந்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய படம் ஒன்றில் பிகினி அணிந்து நடிக்க சொன்னார்கள். யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். எப்படி பிகினி அணிந்து நடிக்கப் போகிறேன், இது தேவையா என்று எந்த கேள்வியும் எனக்குள் எழவில்லை. பட வாய்ப்பு கிடைக்கிறது, அது தான் முக்கியம். 

சில ஆண்டுகள் கழித்து மராத்தி ஷோ மூலம் நான் பிரபலமானபோது மக்கள் நான் முன்பு நடித்த பிகினி காட்சியை பார்த்துவிட்டு என்னை பயங்கரமாக கிண்டல் செய்தனர். அது என்னை பாதிக்காதது போன்றே என் நடிப்பை தொடர்ந்தேன். 

ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி நன்றாக பேசிக் கொண்டிருந்த அவர் திடீர் என்று அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், ஒரு ராத்திரி என்றெல்லாம் வேறு மாதிரியாக பேசினார். 

தயாரிப்பாளர் பேசியதை கேட்டும் கேட்காதது போன்று இருக்க முடியாது. அதனால், நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், ஹீரோ யாருடன் படுப்பார் என்று கேட்டேன். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். இது குறித்து நான் புகார் தெரிவித்த பிறகு அந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். 

அன்று நான் எனக்காக மட்டும் அனைத்து பெண்களுக்காகவும் அப்படி துணிந்து செயல்பட்டேன். என் உடைகள் அல்ல என் திறமை, கடின உழைப்பு, வெற்றி தான் நான் யார் என்பதை நிர்ணயிக்கும் என்று ஸ்ருதி மராதே தெரிவித்துள்ளார்.