ஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளாததால் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி எல்லாம் செய்தார்.

ஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்?
ஓவியா ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளாததால் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி எல்லாம் செய்தார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகு ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதனால் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் பரவியது.

ஆனால் ஓவியா தற்போது அளித்துள்ள பேட்டியில் அதை மறுத்துள்ளார். "நாங்கள் நண்பர்கள் மட்டும் தான். காதல், திருமணம் பற்றி வரும் செய்தி அனைத்தும் வதந்தி" என கூறியுள்ளார்.