காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

காஜல் அகர்வால் உடல் நலக்குறைவால் 3 மாதமாக ஓய்வில் இருந்துள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

காஜல் அகர்வால் உடல் நலக்குறைவால் 3 மாதமாக ஓய்வில் இருந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார் காஜல் அகர்வால். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து நடித்த கவச்சம் தெலுங்கு படம் நாளை ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் 2018ம் ஆண்டு, படங்கள் பற்றி காஜல் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது, 

நான் கவச்சம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோ வந்து காப்பாற்றும் ஹீரோயினாகவே வழக்கமாக நடித்துள்ளேன். மக்கள் ஏன் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கவச்சம் படத்தில் ஹீரோ யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் பாருங்கள். 

முன்பு சீனியர்களுடன் நடித்த நான் தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது திட்டமிட்ட செயல் அல்ல. அதுவாக நடக்கிறது. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஒரே மாதிரி நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. இனி அப்படி செய்ய விரும்பவில்லை. கவச்சம் ஒரு கமர்ஷியல் படம். சில நேரங்களில் கமர்ஷியல் காரணங்களுக்காகவும் சில படங்களில் நடிக்க வேண்டும். 

வெப்சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதில் நடிக்க தயாராக இல்லை. புது விஷயத்தை செய்ய நான் அப்பொழுது மனதளவில் தயாராக இல்லை. கொஞ்சம் பயந்தேன் என்று கூட கூறலாம். ஆனால் தற்போது நான் துணிந்துவிட்டேன். புதுப்புது விஷயங்களை செய்ய விரும்புகிறேன். சவால்களை ஏற்க தயாராக உள்ளேன். 

இந்த ஆண்டு கெரியர் ரீதியாக எனக்கு நல்ல ஆண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அப்படி இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் எனக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் பெட் ரெஸ்டில் இருந்தேன். பிரேக் எடுக்க நினைத்தேன். கையில் உள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு புதுப்படங்களை ஏற்க வேண்டாம் என்று நினைத்தேன். 

எனக்கு auto immune disorder இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தேன். மாலை நேரம் வந்துவிட்டால் காய்ச்சல் வரும், மிகவும் சோர்வாகிவிடுவேன். மருத்துவரிடம் சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. நான் பிரேக் எடுக்க நினைத்தும் முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் புக் ஆகிவிட்டேன். தற்போது நான் குணமாகிவிட்டேன் என்கிறார் காஜல்.