கஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி!

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி!
ரஜினிகாந்த்

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். தனது ரஜினி மக்கள் மன்றம் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.