கொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 !

அண்மையில மிஸ்டர் லோக்கல் படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், அதே வேகத்தோட இரும்புத்திரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில ஹீரோ படத்தில நடிச்சிட்டு வர்றாரு.

கொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 !
சிவகார்த்திகேயன்

அண்மையில மிஸ்டர் லோக்கல் படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், அதே வேகத்தோட இரும்புத்திரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில ஹீரோ படத்தில நடிச்சிட்டு வர்றாரு.

இந்த படம் இப்போ இறுதிகட்டத்த எட்டியிருக்க நிலையில அடுத்ததா பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்ப சிவகார்த்திகேயன் இன்னிக்கு தொடங்கியிருக்கார்.

மேலும் தொடர்ந்து 15 நாட்கள் இந்த ஷெட்யூல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

அனு இமானுவேல் இந்த படத்தில நாயகியா நடிச்சாலும் இந்த படத்தில ஹீரோவுக்கு அடுத்தபடியா முக்கியமான ஒரு ரோல்ல ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்காங்க.

ஏற்கனவே கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க.

கடைசியா பாண்டிராஜ் இயக்கத்தில வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் கிராமத்த மையப்படுத்தி பெரியளவில வெற்றிபெற்றிருந்த நிலையில இந்த படமும் அதே பாணியில உருவாகவிருக்கிறதா சொல்லப்படுது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்