கவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்?

கவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்?
கீர்த்தி சுரேஷ்
கவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்?

சர்கார் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் இவரது காட்சிகள் அதிகமாக இல்லாததனால் என்னவோ இப்படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வரவில்லையாம்.

வருவதில் பலவற்றில் கவர்ச்சி வேடமாக தான் உள்ளதாம். ஆனால் அதை எல்லாம் கீர்த்தி தவிர்த்து விட்டாராம். எந்த காரணத்தை கொண்டும் அவ்வாறான கேரக்டரில் நடிக்க கூடாது என்று முடிவோடு உள்ளாராம்.

இது பற்றி கீர்த்தி கூறுகையில், ”என்னை பொறுத்தவரை மகாநதியில் நடித்தது போன்று கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆசைப்படுகிறேன். நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதை விட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்றார்.