சினிமாவிற்குள் வந்த பிறகு ஒருவரை காதலித்தேன்!- காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் என்னதான் புஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தற்போது தென்னிந்திய சினிமாவில் தான் அதிகம் பாப்புலராக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

சினிமாவிற்குள் வந்த பிறகு ஒருவரை காதலித்தேன்!- காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் என்னதான் புஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தற்போது தென்னிந்திய சினிமாவில் தான் அதிகம் பாப்புலராக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

தற்போது 33 வயதாகும் காஜல் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்விகள் பற்றி பேசியுள்ளார்.

சினிமாவிற்கு வரும் முன்பே இவருக்கு ஒரு காதல் தோல்வி இருந்ததாம். அதன்பிறகு சினிமாவில் முன்னணிக்கு வந்த பிறகு காஜல் ஒருவரை காதலித்தாராம். "அவரும் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. அந்த காதலும் தோல்வியில் முடிய நான் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது தான் காரணம். ஒரு relationshipக்கு முக்கியம் நேரில் சந்தித்து, நேரம் செலவிடுவது தான். ஆனால் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் காதல் தோல்வியின் முடிந்தது" என காஜல் தெரிவித்துள்ளார்.