சிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா?

சுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.

சிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா?
தமன்னா

சுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி டான்ஸ் ஆடும் கதாபாத்திரம் இல்லை. 

மாறாக வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் கிடைத்துள்ளதில் தமன்னாவுக்கு ஒரே குஷி. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் அவர். 

இந்நிலையில் அவரின் ஆசையை சுந்தர் சி. நிறைவேற்றி வைத்துள்ளார். தமன்னா ஆசைப்படுவது எல்லாம் சரி. இத்தனை ஆண்டுகளாக அவரை காதலி கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் அவரை வில்லியாக ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தமன்னாவுக்கு தற்போது நல்ல நேரம் என்றே கூற வேண்டும். அவர் நடித்த தெலுங்கு படமான எஃப் 2 சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் அவர் ஆசைப்படுவது போன்ற கதாபாத்திரங்களும் கிடைக்கிறது. ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் சிம்ரன் கூட வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்ரனை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தமன்னாவையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவோம். 

வயது ஏறிக் கொண்டே போகிறதே, திருமணம் எப்பொழுது என்று கேட்டால் அது நடக்கும்போது நடக்கும் என்று கூலாக கூறுகிறார்.