சூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK, காப்பான் என இரு படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாகவுள்ளன. அதிலும் அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள செல்வராகவனின் NGK படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

சூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK, காப்பான் என இரு படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாகவுள்ளன. அதிலும் அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள செல்வராகவனின் NGK படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால் சூர்யா தனது 38வது படமாக இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்க்ராவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு சூரரைப் போற்று என்றும் இதன் போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் தற்போது அப்டேட் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படத்தின் பாடல் ஒன்றை ரவுடி பேபி பாடலை பாடிய பாடகி தீ பாடவுள்ளாராம். மேலும் இவர் இறுதி சுற்று படத்திலும் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The stunning voice behind #rowdybaby #sandakkara the lovely #Dhee sings for #Suriya38 #GV70 ... recorded overseas with this superb talent ... a quirky fun trk onway ... pic.twitter.com/UBH8UqoHP9

— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019