சேலையில் அழகோவியமாக இருக்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த ஜோடி அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

சேலையில் அழகோவியமாக இருக்கும் நயன்தாரா!
நயன்தாரா

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த ஜோடி அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

அப்படி தான் புத்தாண்டு, மகளிர் தினம் என அனைத்து நாட்களிலும் நடந்தது. சில நேரங்களில் சும்மா கூட கவிதை ஏதாவது ஒன்றை பதிவிட்டு சிங்கிளாக இருப்பவர்களை வெறுப்பேற்றுவார், விக்னேஷ் சிவன்.

நேற்று நயன்தாரா சேலையில் இருக்கும் போட்டோவை பதிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு என்....... தங்கத்துடன் டின்னர் என பதிவிட்டுள்ளார். அது என்ன இடைவெளி என்றால், அதில் ரசிகர்களே தங்களது விருப்பமான வரியை போட்டு கவிதையை முழுமையடைய செய்து கொள்ளலாமாம்.