ஜிகர்தண்டா ரீமேக் படத்திற்காக சம்பளத்தை உயர்த்திய சூப்பர் ஸ்டார் ஹீரோயின்?
மாயாவி மாயாவி தீயாகி வருவாய் என்ற பாடலை பார்த்ததும் நம் நினைவிற்கு வருபவர் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த இவருக்கு பின் தமிழ் பட வாய்ப்புகள் அமையாமல் போனது.

மாயாவி மாயாவி தீயாகி வருவாய் என்ற பாடலை பார்த்ததும் நம் நினைவிற்கு வருபவர் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த இவருக்கு பின் தமிழ் பட வாய்ப்புகள் அமையாமல் போனது.
இதனால் அவர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். வரும் மே 8 ல் எல்லோரும் எதிர்பார்க்கும் மகரிஷி படம் வெளியாகவுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து வால்மீகி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழில் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் தான் இது. இப்படத்திற்காக அவர் சம்பளத்தை கூட்டியுள்ளார் என்றும் 15 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ 2 கோடி சம்பளம் வாங்குகிறார் எனவும் தகவல்கள் பரவியது.
தற்போது ரீமேக் படத்தின் இயக்குனர் ஹரிஷ் சங்கர் அது உண்மையில்லை. அவர் அந்தளவிற்கு கேட்கவில்லை என கூறியுள்ளார்.