திடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே ஷாக் ஆன காஜல்!

தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

திடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே ஷாக் ஆன காஜல்!
காஜல் அகர்வல்
திடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே ஷாக் ஆன காஜல்!

தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். அந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாதா என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். படத்தின் டீஸர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஜல் ஹீரோ, இயக்குனர், மெஹ்ரீன் பற்றி பேசினார். பின்னர் படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றி பேசினார். சோட்டாவின் பெயரை சொன்னதும் அவர் அருகே சென்று அவரின் கையை தொட்டார் காஜல். அதன் பிறகு சோட்டா செய்த காரியம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜல் அகர்வல் தன் அருகே வந்து கையை நீட்டியதும் சோட்டா அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்துவிட்டார். ஒரு நொடி ஷாக்கான காஜல் பின்னர் சுதாரித்து ஒன்றுமே நடக்காதது போன்று பேச்சை தொடர்ந்தார். சோட்டாவின் செயலை பார்த்து ஹீரோவும், மெஹ்ரீனும் அதிர்ச்சி அடைந்தனர். காஜல் அகர்வாலை முத்தமிட்டதற்கு சோட்டா நாயுடு பலே காரணம் அளித்துள்ளார்.

அதாவது காஜலுக்கு நாம் எல்லாம் முத்தம் கொடுக்க முடியாது என்று படத்தின் இசையமைப்பாளர் தமன் தெரிவித்தார். ஏன் முடியாது என்று நினைத்து தான் நான் காஜலுக்கு முத்தம் கொடுத்தேன் என்று சோட்டா கூறினார்.

பொது இடங்களில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது சோட்டா நாயுடுவுக்கு புதிது அல்ல. காஜல் அதிர்ச்சி அடைந்தாலும் பொது இடத்தில் கோபப்பட்டு ரியாக்ட் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. சோட்டா காஜலுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.