தனுஷ் படம் சிக்கலில் மாட்டியது, காரணம் விஜய் படம்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை வைத்து ஒரு படம் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது.

தனுஷ் படம் சிக்கலில் மாட்டியது, காரணம் விஜய் படம்
தனுஷ், விஜய்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை வைத்து ஒரு படம் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது.

ஆனால், விஜய்யுடன் மெர்சல் படத்தில் தேனாண்டாள் கைக்கோர்த்தது, அப்படம் வசூல் நன்றாக இருந்தாலும், முந்தைய படங்களின் தோல்வி, மெர்சல் பட்ஜெட் அதிகரிப்பு என தேனாண்டாள் கையை வலுவாக கடித்தது.

அதை தொடர்ந்து சர்கார் உரிமையிலும் தேனாண்டாள் சிலபல சிக்கல்களை சந்திக்க, சன் பிக்சர்ஸ் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளது.

அவர்களிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று ஒரு கட்டத்தில் சன் பிக்சர்ஸ் உணர்ந்துக்கொண்டது, இதன் பிறகு தேனாண்டாள் படங்களின் உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கிக்கொண்டது.

மேலும், தற்போது தேனாண்டாள் தனுஷை வைத்து தயாரித்து வரும் படம் இதனால் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது, தனுஷும் ’என்னுடைய தரப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. அவர்களிடம் பணமில்லை. நான் எனது அடுத்த படத்துக்குச் செல்கிறேன். இந்தப் படம் தொடர்பாக என் மீது எந்தவொரு புகார் வந்தாலும், என்னைக் கேட்டுவிட்டுத் தான் அந்தப் புகாரை எடுக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பேசியுள்ளாராம்.