தீபிகா கழுத்தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் கழுத்தின் பின்னால் ஆர்.கே. டாட்டூ இல்லாதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தீபிகா கழுத்தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா?
தீபிகா, ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் கழுத்தின் பின்னால் ஆர்.கே. டாட்டூ இல்லாதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகை தீபீகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதையடுத்து நாடு திரும்பிய தீபிகா தனது கணவருடன் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு கிளம்பினார்.

மும்பை விமான நிலையத்தில் அவர்கள் ஜோடியாக புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

தீபிகா, ரன்வீர் சிங்

தீபிகாவின் கழுத்தின் பின்புறம் ஆர்.கே. என்ற டாட்டூ இருக்கும். ஆனால் மும்பை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்களில் அந்த டாட்டூ இல்லை. திருமணத்திற்கு பிறகு டாட்டூவை அழித்துவிட்டாரா இல்லை மேக்கப் போட்டு மறைத்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பும் கூட மேக்கப் போட்டு டாட்டூவை மறைத்துள்ளார் அவர்.

ரன்வீருக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார் தீபிகா. அவர் மீது இருந்த காதலில் அவர் பெயரின் முதல் எழுத்துகளை சேர்த்து ஆர்கே என்று தனது கழுத்தின் பின்புறம் டாட்டூ போட்டார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். ரன்பிர் கபூர் தற்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார்.

ரன்பிர் கபூரின் பெயரின் இரண்டு எழுத்துக்களை டாட்டூ குத்தியதில் வருத்தம் இல்லை. அவரை பிரிந்த பிறகும் அதை நீக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த டாட்டூவை நான் நீக்கிவிட்டதாக பல முறை செய்திகள் வெளியாகின. ஆனால் அதை நீக்கும் எண்ணம் இல்லை என்று தீபிகா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற உள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து வரும் 28ம் தேதி மும்பையில் மீண்டும் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.