தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய்?

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய்?
விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இந்த பேனரில் நடிக்க விஜய்க்கு ஆர்வம் இல்லையாம்.

இதைப்பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்த படத்தை தானே தயாரிக்கும் ஒரு முடிவில் இருக்கிறாராம்.

ஏற்கனவே புலி படத்தை தன்னுடைய மேனேஜர் பேரில் தயாரித்த விஜய், இந்த முறை தானே களமிறங்க இருக்காராம்.