திருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்?

ரகுல் ப்ரீத் சிங் பேசுவதை பார்த்தால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போலயே.

திருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்?
ரகுல் ப்ரீத் சிங்
திருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்?

ரகுல் ப்ரீத் சிங் பேசுவதை பார்த்தால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போலயே.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ஓடியோடி உழைக்கும் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது,

கெரியர் மீது செலுத்தும் கவனத்தை தனிப்பட்ட வாழ்க்கை மீதும் செலுத்துமாறு என் அம்மா கூறுகிறார். எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலை என்று இருக்க வேண்டாம் என்கிறார் அவர்.

விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகுமாறு அம்மா வலியுறுத்தி வருகிறார். இது குறித்து எங்க அம்மா கிளாஸே எடுத்துவிட்டார். இன்னும் எத்தனை நாட்களுக்கு சிங்கிளாக இருப்பது என்று அம்மா கேட்கிறார். என் அம்மா சொல்வது போன்று உடனே திருமணம் செய்து கொள்ள எனக்கு மும்பை அல்லது ஹைதராபாத்தில் காதலர் இல்லை. அதனால் யாரையாவது பார்த்துக் கொடுக்குமாறு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தனது வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசுபவராக இருக்க வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் முன்பு தெரிவித்திருந்தார். அவரும், நடிகர் ராணாவும் காதலிப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதையடுத்து தானும், ராணாவும் நல்ல நண்பர்களே தவிர காதலர்கள் இல்லை என்று விளக்கம் அளித்தார் ரகுல்.

ரகுலின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று நம்புகிறார்கள். நண்பர்கள் பார்க்கும் நபர் ரகுலுக்கு பிடிக்க வேண்டுமே. ரகுல் தன் அம்மாவின் ஆசையை கூடிய சீக்கிரம் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.