தளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு!

தளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு!
கதிர்

விஜய் அடுத்ததாக அட்லீயுடன் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்போதைக்கு தளபதி-63 என பெயர் வைத்துள்ளனர்.

AGS நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் தன்னை இணைத்ததை பற்றி கதிர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரே ஒரு போன் காலில் எனது கனவை நினைவாக்கியுள்ளீர்கள் என தயாரிப்பு நிறுவனத்தை பற்றியும் விஜய்யை பற்றியும் கூறியுள்ளார்.