தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா?

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா?
ரஷ்மிகா மந்தனா

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து தளபதி 63 படத்தில் அட்லி, விஜய் ஆகியோர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த வெற்றிக் கூட்டணியின் படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

 

சமந்தா

தளபதி 63 படத்தில் நயன்தாரா அல்லது சமந்தா ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்ற பேச்சு உள்ளது. இதற்கிடையே கன்னட நடிகை ரஷ்மி மந்தனாவை விஜய்க்கு ஜோடியாக்கிப் பார்க்க அட்லி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்மிகா

தளபதி 63 படத்தின் ஹீரோயின் ரஷ்மிகா என்று அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர். இதை பார்த்த ரஷ்மிகாவோ, டேய், எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதே டா என்று 'மரியாதையுடன்' தெரிவித்துள்ளார். 

விஜய் தொடர்ந்து சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷுடன் நடித்து வருகிறார். புதிதாக வேறு யாரையாவது நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும். சும்மா பார்த்த ஜோடியையே திரும்பத் திரும்ப பார்க்க போர் அடிக்கிறது அட்லி. புதுசா முயற்சி பண்ணுங்க. வீ ஆர் வெயிட்டிங். 

விஜய், ரஷ்மிகா ஜோடியை தளபதி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்து என்ன செய்ய, தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கணுமே. அவர்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.