தளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய அறிவிப்பு

தளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

தளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய அறிவிப்பு
விஜய்

தளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.


சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி, மெர்சலை அடுத்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக சேர்ந்து பணியாற்ற உள்ளனர். 

இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை பிள்ளையார் முன்பு வைத்து கடவுளின் ஆசி பெற்றுள்ளனர். படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய், அட்லி படத்தை தயாரிப்பதை ஏ.ஜி.எஸ். நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த படத்தில் தயவு செய்து கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக போட வேண்டாம் என்று பலர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

பைரவா, சர்கார் என்று இரண்டு படங்களில் விஜய் ஜோடியாக நடித்துவிட்டார் கீர்த்தி. இந்நிலையில் தான் ரசிகர்கள் இப்படி ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை அட்லி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
தளபதி 63