தளபதி 63 வரிசையில் இணைந்த மிஸ்டர் லோக்கல் !

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

தளபதி 63 வரிசையில் இணைந்த மிஸ்டர் லோக்கல் !
மிஸ்டர் லோக்கல்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தில் பாக்கி இருந்த சில காட்சிகளை படக்குழு படமாக்கினர். அதே நாளில் அந்த காட்சிக்கான டப்பிங் பணிகளையும் முடித்து ஒரேடியாக தற்போது படத்தை முடித்துவிட்டார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி பல கோடிகள் கொடுத்து கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இதே சன் டிவி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் உரிமையையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.