தொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் !

இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும், நடிகை ஏமி ஜாக்சனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் !
ஏமி ஜாக்சன்

இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும், நடிகை ஏமி ஜாக்சனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் அவர் அங்கேயே செட்டிலாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

ஏமியும், இங்கிலாந்தை சேர்ந்த மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸின் மகனான ஜார்ஜும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினாலும் காதலை ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

ஜார்ஜ் ஏமியை அழைத்துக் கொண்து தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியாவுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். ஜாம்பியா காடுகளில் வைத்து ஜார்ஜ் ஏமிக்கு ப்ரபோஸ் செய்துள்ளார். ஜார்ஜ் தனக்கு அணிவித்த பெரிய வைர மோதிரத்துடன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ஏமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக ஏமி ஜார்ஜுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். புது வீட்டில் கிறிஸ்துமஸை கொண்டாடியதாக தெரிவித்திருந்தார். 

மதராசபட்டினம் மூலம் நடிகையானவர் ஏமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.