நடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து!

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வளர்ந்து வரும் நடிகராரோ, பெரிய நடிகரோ எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர்.

நடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து!
விஜய்

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வளர்ந்து வரும் நடிகராரோ, பெரிய நடிகரோ எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர்.

இவர் சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றுள்ளார், அங்கு வழக்கம் போல் அவரை ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். அதே நிகழ்ச்சிக்கு சென்ற Rj ஷா விஜய்யை சந்தித்துள்ளார், அதோடு அவரிடம் துப்பாக்கி முனை படத்திற்காக ஆசீர்வாதம் கேட்டுள்ளார்.

உடனே விஜய், ஷா ரொம்ப நல்ல நடித்துள்ளீர்கள் என்று விமர்சனம் வருகிறது, பெரியதாக வா நண்பா என்று கட்டி அனைத்தாராம்.

இதனை ஷாவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போட்டு தளபதி தரிசனம் கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

துப்பாக்கி முனை படத்திற்காக ஆசிர்வாதம் கேட்டேன்!!!
ஷா ரொம்ப நல்லா பண்ணி இருக்கன்னு Feedback வருது!!
பெரிசா வா நண்பா என்றார்
கட்டி அணைத்தபடி!!
தளபதி தரிசனம் கிடைச்சிருச்சி pic.twitter.com/xKeVPUSBKV

— Mirchi sha (@Mirchisha) December 13, 2018