நடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்! கேட்டால் சிரித்துவிடுவீர்கள்

கார்த்தி-ராகுல் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த தேவ் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தீரன் பட ஜோடிக்கு இந்த படம் பெரிய பிளாப்.

நடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்! கேட்டால் சிரித்துவிடுவீர்கள்
ராகுல் ப்ரீத்க்

கார்த்தி-ராகுல் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த தேவ் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தீரன் பட ஜோடிக்கு இந்த படம் பெரிய பிளாப்.

இந்நிலையில் ஒரு பத்திரிகைக்கு நடிகை ராகுல் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமா, ஜிம் பிசினெஸ் உட்பட பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.

”படம் ஹிட் ஆனால் நான் அதிகம் சந்தோசப்படமாட்டேன். படம் பிளாப் ஆனால் அதிகம் வருத்தமும் படமாட்டேன். நான் கொஞ்சம் ஸ்பீரிச்சுவல்,” என ராகுல் பேசியுள்ளார்.

மேலும் அவரது நண்பர்கள் இவரை 'எவரேடி பேட்டரி' என்று தான் கிண்டலாக அழைப்பார்களாம்.

இவருக்கு எப்போதும் டையர்டு என்கிற வார்த்தையே பிடிக்காதாம். அப்பா ஆர்மியில் பணியாற்றியதால் இவரை கராத்தே, ஸ்விம்மிங், டென்னிஸ், ஸ்குவாஷ், இறகுப்பந்து என பல விஷயங்களில் பயிற்சி மேற்கொள்ள செய்தாராம். அது தான் பிட்டாக இருக்க காரணம் என ராகுல் தெரிவித்துள்ளார்.