நானும், பிரபுதேவாவும் காதலிக்கிறோமா?: இந்துஜா விளக்கம்

தான் பிரபுதேவாவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்துஜா.

நானும், பிரபுதேவாவும் காதலிக்கிறோமா?: இந்துஜா விளக்கம்
இந்துஜா

தான் பிரபுதேவாவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்துஜா.

மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இந்துஜா. மேயாத மான் படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை விட இந்துஜா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். 

மௌன குரு படம் புகழ் இயக்குனர் சாந்தகுமாரின் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து மெர்குரி படத்தில் நடித்த போது அவருக்கும், இந்துஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. 

இந்நிலையில் இது குறித்து இந்துஜா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 

நான் மெர்குரி படத்தில் நடித்தபோது எனக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவர் என் காதலர் இல்லை, குரு போன்றவர் என்று கூறியுள்ளார்.