நான் கர்ப்பமாக இருக்கிறேனா? - சமந்தா பதிலடி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகிறது.

நான் கர்ப்பமாக இருக்கிறேனா? - சமந்தா பதிலடி
சமந்தா

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகிறது.

திருமணம் முடிந்தும் சினிமா நிலைக்கும் ஒரு நடிகை என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்த இவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இடையில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் கிளம்ப ஆரம்பித்தது. அப்படி ஒரு செய்தியை பார்த்த சமந்தா டுவிட்டரில், அப்படியா, எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்துள்ளார்.