நயன்தாரா அளவுக்கு அதிக சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா தான் முன்னணியில் உள்ளார். அவரின் சம்பளம் தான் மற்ற அனைத்து நடிகைகளை விட அதிகம் என கூறப்படும் நிலையில் அவருக்கு இணையாக மற்றொரு நடிகை சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

நயன்தாரா அளவுக்கு அதிக சம்பளம் கேட்ட பிரபல நடிகை!
பூஜா ஹேக்டே

தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா தான் முன்னணியில் உள்ளார். அவரின் சம்பளம் தான் மற்ற அனைத்து நடிகைகளை விட அதிகம் என கூறப்படும் நிலையில் அவருக்கு இணையாக மற்றொரு நடிகை சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

தமிழில் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பூஜா ஹேக்டே. இவர் அடுத்து நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக மஹரிஷி படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் 1.75 கோடி ருபாய் சம்பளமாக கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா இப்போது பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என பலரும் கூறினாலும், தென்னிந்திய படத்தில் இவ்வளவு சம்பளம் டாப் ஹீரோயின்களுக்கு மட்டுமே தரப்படுவது குறிப்பிடத்தக்கது.