பிக்பாஸ் யாஷிகா - யோகி பாபு ஜோடியாக படமா?

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் யாஷிகா - யோகி பாபு ஜோடியாக படமா?
யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

அதன் பிறகு அவருக்கு தற்போது புதிய பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகிறது. பிக் பாஸ் மஹத் ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடித்துவரும் நிலையில் தற்போது இன்னொரு படத்தில் அவர் கமிட் ஆகியுள்ளார்.

யோகிபாபு நடிக்கும் ஒரு சோம்பி காமெடி படத்தில் தான் யாஷிகா நடிக்கிறார். மோ படத்தை இயக்கிய புவன் இந்த படத்தினை இயக்குகிறார்.

ஒரே இரவில் நடப்பது போன்ற கதை கொண்ட இந்த படத்தின் ஷூடிங் இன்னும் இரண்டு நாட்களில் துவங்குகிறதாம்.