பூஜையுடன் துவங்கும் தளபதி 65?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்று விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பூஜையுடன் துவங்கும் தளபதி 65?
தளபதி 65

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்று விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை வரும் 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் போட்டு, படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம் என கூறுகின்றனர்.

மேலும் வரும் ஜூன் 22ஆம் தேதி, விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் ட்ரைலர் அல்லது தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.