பேட்ட ட்ரைலர் தேதியை அறிவித்த படக்குழு!

பேட்ட படத்தின் ட்ரைலர் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

பேட்ட ட்ரைலர் தேதியை அறிவித்த படக்குழு!
பேட்ட

பேட்ட படத்தின் ட்ரைலர் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் ட்ரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால் எந்த நேரத்திற்கு வெளியாகும் என்ற தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்ட