பரத்துடன் கைகோர்த்த நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் பரத்துடன் ஒரு வலைதளத் தொடரில் நடித்து வருகிறார்.

பரத்துடன் கைகோர்த்த நடிகை பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் பரத்துடன் ஒரு வலைதளத் தொடரில் நடித்து வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த பிரியா தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு வலைதளத் தொடரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பரத்துடன் ஒரு வலைதளத் தொடரில் நடிப்பதாகவும், அது அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி, சின்னத்திரை நடிகை, திரைப்பட நடிகை என பல முகங்களைக் கொண்டிருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சினிமாவில் நடிக்க வந்தபிறகு அதைவிட்டு மற்ற தளங்களில் நடிப்புத் திறனை வெளிப்படுத்த தயங்குவார்கள். இப்போது வலைதளத் தொடர்கள் காலத்தின் போக்காக மாறிவருவதால் அதற்கான ரசிகர்களையும் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரியா.