பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்!

அமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது அவர் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் நுழைந்துள்ளார்.

பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்!
அமலா பால்

அமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது அவர் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் நுழைந்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தினை மிக பிரமாண்டமாக எடுக்கவுள்ளார். அதற்காக அவர் பல முன்னணி நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்.

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பல நட்சத்திரங்கள் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை மணிரத்னம் தேர்ந்தெடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

500 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் இருக்கும் என்பதால் இந்த படத்தினை தயாரிக்க ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் பின்வாங்கியதால் தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.