பேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா? நான் என்ன முட்டாளா? நேற்றைய சர்ச்சைக்கு ரஜினிகாந்த் அதிரடி விளக்கம்

ரஜினிகாந்த் எது பேசினாலும், பேசாவிட்டாலும் ட்ரெண்டில் இருந்துக்கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் நேற்று விமான நிலையத்தில் பேரறிவாளன் மற்றும் 7 பேர் குறித்து கேட்ட பொது எனக்கு தெரியாது என்கிறார் ரஜினி.

பேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா? நான் என்ன முட்டாளா? நேற்றைய சர்ச்சைக்கு ரஜினிகாந்த் அதிரடி விளக்கம்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் எது பேசினாலும், பேசாவிட்டாலும் ட்ரெண்டில் இருந்துக்கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் நேற்று விமான நிலையத்தில் பேரறிவாளன் மற்றும் 7 பேர் குறித்து கேட்ட பொது எனக்கு தெரியாது என்கிறார் ரஜினி.

அது பெரும் சர்ச்சையை உருவாக்க தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதில் இவர் கூறுகையில் 'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர், கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து, ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல' என்று கூறியுள்ளார்.