மிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருந்த இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

மிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருந்த இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

கீர்த்தி சுரேஷுடன் மலையாள நடிகர் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரிலீஸாகி இன்றுடன் (மே-9) ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.

இதனை நினைவுகூறும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படத்தின் தொடக்க பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அப்பட படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.