மீண்டும் இணையதளத்தை கலக்கும் ஆரவ், ஓவியா காதல்!

பிக்பாஸ் மூலம் ஆரவ் மீது காதல் கொண்டவர் ஓவியா. ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார்.

மீண்டும் இணையதளத்தை கலக்கும் ஆரவ், ஓவியா காதல்!
ஆரவ், ஓவியா

பிக்பாஸ் மூலம் ஆரவ் மீது காதல் கொண்டவர் ஓவியா. ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போதும் இல்லை என்று தான் தற்போது வரை கூறி வருகிறார். நாங்கள் நல்ல நண்பர்கள், எங்கள் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று தான் சொல்லுகிறார்.

ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும், அங்கு நெருக்கமாக நின்று செல்பி எடுத்து கொள்வதும் அவர்கள் சொல்வதை நம்பவிடாமல் செய்கிறது.

இப்போது கூட ஒரு செல்பியை ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் ஓவியாவின் உண்மையான பெயரான ஹெலனுடன் நானும் சூப்பர் மேனும் என்ற பெயரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த போட்டோ தான் சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஆரவ், ஓவியா