மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!

மகள் ஆராத்யாவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!
ஐஸ்வர்யா ராய்

மகள் ஆராத்யாவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா. இவருக்கு தற்போது 8 வயது ஆகிறது. 

பாலிவுட்டின் உச்ச நட்சத்திர தம்பதி என்பதாலேயே, இவர்களின் குடும்பத்தின் மீது அளவுக்கு அதிகமான மீடியா வெளிச்சம்படுவது வழக்கமாக இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு, இதன் போக்கு அதிகரித்து விட்டது. 

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இரவு உணவு அருந்தச் சென்றார். அப்போது, மகள் ஆராத்யாவின் கையை பிடித்தப்படி அவர் நடந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. 

இதை பார்த்த நெட்டிசன்கள், ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். மகளை ஏன் இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்துவிட்டனர். இன்னும் சிறு குழந்தை போல் ஏன் அவரை பாவிக்கிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். 

ஐஸ்வர்யா ராய்

"இந்த பொண்ணுக்கு இப்போ 8 வயது ஆகிறது. எனவே ஐஸ்வர்யா அவரை சுதந்திரமாக நடக்கவிட வேண்டும்", என ஒருவர் கூறியுள்ளார். "ஐஸ்வர்யா ராய் எப்போதும் அவரது மகளின் கையைப் பிடித்திருப்பதால், ஆராத்யாவுக்கு கழுத்து வலி வராமல் இருந்தால் சரி ", என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இது சின்ன சாம்பிள் தான். கருணையே இல்லாமல் நிறைய பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். 

அதேசமயம் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். "ஒரு அம்மாவுக்கு தெரியும். மகளின் கைகளை எப்போது பிடிக்க வேண்டும், எப்போது விட வேண்டும் என்று. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. அவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்துவிட்டார்" என ஒருவர் கேட்டுள்ளார். இதேபோல் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே பொது இடங்களில் தன் மகளை கையைப் பிடித்தபடி அழைத்து செல்வது தான் ஐஸ்வர்யா ராயின் வாடிக்கை. பெரும்பாலான புகைப்படங்களில் பாவம் ஆராத்யா எனச் சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறது. சாலைகளில் மட்டுமல்ல, சில நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் அப்படித்தான் இருக்கின்றனர். 

அதோடு மகள் ஆராத்யாவோடு சேர்ந்து ஐஸ்வர்யா ராய் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராயை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.