மீ டூ: கவலையில் இருக்கும் நமீதா!

மீ டூ குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் நமீதா.

மீ டூ: கவலையில் இருக்கும் நமீதா!
நமீதா

மீ டூ குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் நமீதா.

பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. சினிமா துறை மட்டும் அல்லாமல் பிற துறைகளை சேர்ந்த பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நமீதா கூறியிருப்பதாவது,

மீ டூ என்ற பெயரில் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றார்கள். தங்களுக்கு நடந்த விஷயம் பற்றி வெளியே சொல்ல துணிச்சல் வேண்டும். இதில் உண்மை எது, பொய் எது என்று பார்க்காமல் புகார் தெரிவிக்கும் பெண்களை கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

முதலில் பெண்கள் கூறும் மீ டூ புகாரை கேளுங்கள். அதன் பிறகு அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். உண்மையை கண்டுபிடிக்கும் அளவுக்கு அனைவரும் புத்திசாலிகளாகவே உள்ளார்கள். இருப்பினும் மீ டூவை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்று எனக்கு கவலையாக உள்ளது.

முன்பு போன்று கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது என் கவனம் முழுக்க என் சினிமா கெரியர் மீது தான் உள்ளது என்கிறார் நமீதா. அவர் தற்போது அகம்பாவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நமீதா அகம்பாவம் படத்தில் கிளாமரே இல்லாத பத்திரிகையாளராக நடிக்கிறார். அதுவும் அரசியல்வாதியுடன் துணிச்சலாக மோதும் பத்திரிகையாளராக நடிக்கிறார். இந்த படத்தை நமீதா பெரிதும் எதிர்பார்க்கிறார். நமீதாவை இப்படி வித்தியாசமாக பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.