ராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி!

ராகவா லாரன்ஸ் தொடர்பாக தெலுங்கு திரையுலகிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி!
ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு திரையுலகில் உள்ள சில பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதையடுத்து தெலுங்கு திரையுலகினர் அவரை ஒதுக்கி வைக்கவே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். 

தற்போது ஸ்ரீ ரெட்டி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

My Words about Raghava Lawrence gaaru #SriReddy #PLEASE pic.twitter.com/8HDHseCdxq

— Sri Reddy (@MsSriReddy) November 17, 2018

சென்னைக்கு வந்த எனக்கு பட வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். நான் அவரின் வீட்டிற்கு சென்றபோது அனைவரும் என்னிடம் அன்பாக நடந்த கொண்டனர். தயவு செய்து என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும் தொந்தரவு செய்யாதீர்கள். எங்களை கிண்டல் செய்ய வேண்டாம் என்று ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகினரை கேட்டுக் கொண்டுள்ளார். 

பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக முன்பு ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த ராகவா லாரன்ஸ், மீடியா முன்பு ஸ்ரீ ரெட்டி ஆடிஷனில் கலந்து கொண்டு சிறப்பாக நடித்தால் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் மீடியா முன்பு ஆடிஷன் வைக்காமலேயே ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளார். 

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக ராகவா லாரன்ஸ் மீது புகார் தெரிவித்தீர்களா? அப்படியானால் அவர் எப்படி நல்லவர் ஆனார்? உங்களின் புகாருக்கு ஆதாரம் உள்ளதா என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகவா லாரன்ஸை அப்படி திட்டிவிட்டு தற்போது திடீர் என்று இந்த மாற்றம் ஏன் என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.