'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா!

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா?

'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா!
த்ரிஷா

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா?

தலைப்பை பார்த்ததும் த்ரிஷா திமிர் பிடித்த ராங்கியாகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அவர் எப்பொழுதும் போன்று சமத்தாக தான் உள்ளார். அவர் நடிக்க உள்ள புதுப் படத்தின் பெயர் ராங்கி. 

எங்கேயும் எப்போதும் படம் புகழ் சரவணன் ராங்கியை இயக்குகிறார். படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியிருப்பவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார். ராங்கி பட பூஜை சென்னையில் நடந்தது. இது குறித்து த்ரிஷா புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். 

பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைப்பை பார்க்கும்போதே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்கும் என்று தெரிகிறது. 

த்ரிஷாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கத் தான் ஆர்வமாக உள்ளார். நிச்சயம் ராங்கியாக ஜொலிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.