ரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா?

விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுபற்றி ரஜினியின் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றாலும் மறுப்பும் வரவில்லை.

ரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா?
ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுபற்றி ரஜினியின் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றாலும் மறுப்பும் வரவில்லை.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை எனவும், இதை அனிருத்தே ஒரு விழாவில் கூறிவிட்டார் எனவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தான் என தகவல்கள் வந்துள்ளன. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.

கீர்த்தி நடித்த கடைசி சில படங்கள் சரியாக வெற்றி பெறாததால் இந்த செய்தியை கேட்டதும் அனைத்து ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.