ரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்!

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்தப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் (ஏப்ரல் 9) காலை 8.30 மணியளவில் வெளியானது.

ரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்!
தர்பார்

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்தப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் (ஏப்ரல் 9) காலை 8.30 மணியளவில் வெளியானது.

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஃபஸ்ட் லுக்கை கொண்டாடி வருகிறார்கள். போஸ்டரை பார்க்கும் போது ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியாகிறது. மேலும் ஃபஸ்ட் லுக்கில் நாம் கவனிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் உள்ளன, இதோ அந்த விவரங்கள்.

போஸ்டரில் ரஜினிக்கு பின் இரண்டு துப்பாக்கிகளும், ஒரு கைவிலங்கு திறந்த நிலையிலும் உள்ளது. போலீஸ் நாய், போலீஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் பேட்ஜ் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், பின்னணியில் ஒரு மேப்பும், கட்டிடமும் இடம் பெறுகிறது. குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப், அதோடு மும்பை என்ற வார்த்தையும் தலைகீழாக எழுதியுள்ளனர்.

நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா, நீங்களே முடிவு பண்ணுங்க என்ற பஞ்ச் வசனம் உள்ளது.

நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் ரஜினி படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தர்பார்