ரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை !

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த உடையின் விலையை அறிந்து பலரும் வியந்துள்ளனர்.

ரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை !
கரீனா கபூர் கான்

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த உடையின் விலையை அறிந்து பலரும் வியந்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசஞ்சுக்காக ஸ்பெஷல் வீடியோவில் வந்தார் நடிகை கரீனா கபூர். கைலி+ கரீனா பாடலை உருவாக்கியதற்காக கரீனா தில்ஜித்திற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார். 

அந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரின் கண்ணும் கரீனாவின் பிங்க் நிற கவுன் மீது தான் இருந்தது. பளிச் பிங்கில் இருந்த அந்த கவுனை கரீனா வோக் பத்திரிகை போட்டோஷூட்டில் கலந்து கொண்டபோது அணிந்திருந்தார். அந்த போட்டோஷூட் லண்டனில் நடந்தது. 

வோக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் கரீனாவின் புகைப்படம் வந்தது. கரீனாவுடன் அவரின் நெருங்கிய தோழியான நடிகை அம்ரிதா அரோராவும் சென்றிருந்தார். 

வோக் போட்டோஷூட்டின் இடையே தான் கரீனா தில்ஜித்திற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பிங்க் நிற உடையின் விலை ரூ. 1.66 லட்சம் மட்டுமே. கரீனா ஹேண்ட்பேக்கிற்கே ரூ. 1 லட்சம் செலவு செய்வார். 

அதனால் அவர் கவுனுக்கு இவ்வளவு செலவு செய்ததில் அதிசயம் இல்லை. 

 

OH MY GAWD.....QUEEN