விஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே இல்லை! காஞ்சனா-3 நாயகி வேதிகா

மலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் அவ்வப்போது தலை காட்டுபவர் நடிகை வேதிகா. இவரது நடிப்பில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்த காஞ்சனா-3 படம் திரைக்கு வந்திருந்தது.

விஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே இல்லை! காஞ்சனா-3 நாயகி வேதிகா
வேதிகா

மலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் அவ்வப்போது தலை காட்டுபவர் நடிகை வேதிகா. இவரது நடிப்பில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்த காஞ்சனா-3 படம் திரைக்கு வந்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்த வேதிகா, அதில் பேசுகையில், காஞ்சனா-3 சூப்பர் ஹிட். படம் பார்த்துவிட்டு நிறைய ஆடியன்ஸ் போன் செய்து வாழ்த்தினார்கள். இதுவரை படத்தின் வசூல் மட்டும் 100 கோடி என்று சொல்கிறார்கள்.

எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படம் காவியத்தலைவன். விஜய் சார் இந்தப் படத்தைப் பார்த்து, என் நடிப்பைப் பாராட்டி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. இதுவரை என் நடிப்புக்கு கிடைத்த பெரிய பாராட்டாக நான் அதைத்தான் பார்க்கிறேன் என்றார்.