விஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்!

விஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.

விஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்!
விஜய்-அட்லீ

விஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.

சில பேட்டிகள், செய்திகள் வைத்து பார்க்கும் போது அனைவரும் சொல்லக்கூடியது இதுதான். விளையாட்டு துறையில் நடக்கும் மோசமான விஷயங்களை அட்லீ இப்படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார் எனப்படுகிறது.

இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான், படப்பிடிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் அட்லீ மனைவி பிரியா, AGS உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதாக தங்களது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் போட்டுள்ளனர். அதை வைத்து பார்க்கும் போது விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு அங்கு சில முக்கிய இடங்களில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.